சிங்கப்பூரில் இதுவரை 1.8 மில்லியன் முதல் டோஸ் COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

(Photo: Ministry of Health)

சிங்கப்பூரில் இதுவரை சுமார் 1.8 மில்லியன் மக்கள் தங்களின் முதல் COVID-19 தடுப்பூசியைப் போட்டுகொண்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அவர்களில் 1.2 மில்லியன் மக்கள் தங்களது 2வது தடுப்பூசியைப் போட்டுகொண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பணியாற்றிய தமிழக நிதி அமைச்சர்!!

தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகமானோர் முன்வரும் இந்த நிலை ஊக்கமளிப்பதாக கூறிய அவர், இருப்பினும் தொடர்ந்து அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வயதானோர் அதிகம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, இந்த மே மாத இரண்டாம் பாதியில் இருந்து கட்டங்கட்டமாக தடுப்பூசி அழைப்பு தொடங்கும்.

தடுப்பூசி நிலையில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் மருத்துவப் பொருள்கள், இதர கருவிகள் வழங்க சிங்கப்பூர் தயார்