சொன்னா கேளுங்க! – 2050-இல் சிங்கப்பூரின் நிலை இதுதானா! மோசமான காலநிலை மாற்றத்தின் தாக்கம்

Singapore weather report june
Pic: Unsplash

காலநிலை மாற்றத்தின் விளைவாக சிங்கப்பூரில் எதிர்வரும் நாட்களில் கடுமையான வெப்பம் மிகுந்த பகல் பொழுதுகளும் கடும் குளிரான இரவுப்பொழுதுகளும் நிகழும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வானிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதால் இவ்வாறு நிகழக்கூடும் என்று கருதப்படுகிறது.இதனைத் தொடர்ந்து வானிலை முன்னறிவிப்புத் திறனை வலுப்படுத்துவதற்கும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு,மேம்பாட்டுப் பணிகளுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளிக்க இது உதவும்.கடந்த நிதியாண்டிற்கான வாரியத்தின் ஒருங்கிணைந்த நீடித்த நிலைத் தன்மை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில்,இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக,அட்மிரல்டியில் ஏப்ரல் முதல் தேதி 36.8 டிகிரி செல்சியஸ் பதிவானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பிப்ரவரி 2௦ஆம் தேதி இரவு நேர வெப்பநிலை 20.5 டிகிரி செல்சியஸாக பதிவானது.

கார்பன் வெளியேற்றத்தை குறைக்காவிடில்,எதிர்வரும் 2050-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மிக மோசமான வெப்பநிலையும்,பெருவெள்ளமும் ஏற்படும் என்று ஐநா நிறுவனத்தின் பருவநிலை தொடர்பான குழு அறிக்கையில் கடந்த ஆண்டு எச்சரித்திருந்தது.
தற்போது சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற வாரியம் 2100-ஆம் ஆண்டு வரையிலான வானிலை முன்னறிவிப்பு தொடர்பிலான ஆய்வில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.