சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பெய்யுமா? – வானிலை நிலவரம்

Singapore weather report
Pics: Zheng Zhangxin & File/Today

சிங்கப்பூரில் இந்த அக்டோபர் முதல் பாதியில் வெப்பமான மற்றும் குறைந்த ஈரப்பதமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

வேலையிடத்தில் இறந்துகிடந்த ஆடவர் – ஒருவர் கைது

இந்த இரண்டு வாரங்களில், தினசரி அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணித்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.

வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை சில இரவுகளில் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவின் சில பகுதிகளில், இந்த அக்டோபர் முதல் பாதியில் மழைப்பொழிவு சராசரியை விட குறைவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதில் சில நாட்களில், மழை பொழிவானது மாலை வேலை வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 10 பெரிய தொற்று குழுமங்கள் கண்காணிப்பு – அதில் 8 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்