சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

Singapore weather report june
Pic: Unsplash

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பமான வானிலை நிலவும் என்றும், அந்த காலக்கட்டத்தில் காற்றின் ஈரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று (16-06-2021) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களில், வெப்ப நிலையானது 25 டிகிரி செல்சியஸில் இருந்து 34 டிகிரி செல்சியஸூக்கு இடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மின் ஸ்கூட்டர்கள் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு’- தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலப் போக்குவரத்து ஆணையம்!

மேலும், சில நேரங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை எடக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் தீவின் தென்கிழக்கு பகுதியில் வெப்பநிலை குறைந்தது 28 டிகிரி செல்சியஸாக இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் சில நாட்களில் காலை, பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட்ஹில் சந்தை மற்றும் உணவு நிலைய கடைக்காரர்களுக்கு கட்டாய கிருமித்தொற்று பரிசோதனை.!