சிங்கப்பூரில் இனி இவர்களுக்கு Work Pass அனுமதி விண்ணப்பிப்பு கட்டாயம்!

Changi airport
(PHOTO: Joshua Lee)

சார்பு அனுமதி (Dependant’s pass) வைத்திருப்பவர்கள் சிங்கப்பூரில் பணியாற்ற விரும்பினால் அனுமதிக் கடிதத்திற்கு பதிலாக, work pass அனுமதியை பெற வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் இன்று (மார்ச் 3) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் பிற வெளிநாட்டினரை போலேவே அதனையும் சீரமைக்க இந்த நடவடிக்கை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு புதிதாக வந்துள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய நடவடிக்கை!

எனவே, சார்பு அனுமதி வைத்திருப்பவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், வெளிநாட்டுத் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான நிபந்தனைகள் போலவே அதனையும் மேற்கொள்ள வேண்டும்.

இதில் தொடர்புடைய தகுதி சம்பளம், ஒதுக்கீடு மற்றும் தீர்வை ஆகியவையும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1 முதல், சார்பு அனுமதி வைத்திருப்பவர்கள் தாங்கள் தற்போது பயன்படுத்தும் அனுமதிக் கடிதத்துக்கு பதிலாக Employment Pass, S Pass அல்லது work permit போன்ற அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதி கடிதம் மூலம் பணிபுரிபவர்கள் அது காலாவதி ஆகும் வரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு, முதலாளிகள் work pass அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுபற்றிய கூடுதல் விபரங்கள் மே 1ம் தேதி வெளியிடப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

துவாஸ் தீ விபத்து: காயமடைந்த ஊழியர்களின் தற்போதைய நிலை என்ன?