“லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ஊழியர்களை பேருந்துகளுக்கு மாற்றுவது சுலபமல்ல”

workers carrying lorries offences
(Photo: LTA/FB)

சமீபத்தில் லாரிகளில் ஏற்றிச்செல்லப்பட்ட ஊழியர்கள் விபத்துக்களில் சிக்கியதை அடுத்து, லாரி மூலம் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் நடைமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த விபத்துகளைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளும் லாரி மூலம் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் நடைமுறைக்கு எதிராக கருத்துக்களை கூறினர்.

பேருந்து மோதிய விபத்தில் சைக்கிள் ஓட்டி மரணம்

இந்நிலையில், லாரிக்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றிச்செல்வது சுலபமானது அல்ல என சில கட்டுமான நிறுவனங்கள் ‘செய்தி‘யிடம் கூறியதாக அது தெரிவித்துள்ளது.

ஊழியர்களை ஏற்றிச்செல்வதற்கு மட்டும் லாரி பயன்படுத்தப்படுவது அல்ல, சில பொருள்களை அதில் ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுவதாக நிறுவனங்கள் குறிப்பிடுவதாக அது கூறியுள்ளது.

அதேபோல பெரும்பாலும் ஊழியர்களுடன் பொருட்கள் ஏற்றிச்செல்வது கிடையாது என்றும் நிறுவனங்கள் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

100 ஊழியர்கள் வேலை செய்யும் ஒரு வேலையிடத்துக்கு பேருந்து ஏற்பாடு செய்யலாம் என்றும், ஆனால் ஒவ்வொரு இடத்திற்கும் அதிகபட்சமாக 10 ஊழியர்கள் வேலைக்கு அனுப்பப்படுவதாக கூறியுள்ளனர்.

அதற்காக ஒரு பேருந்தை ஏற்பாடு செய்வது சிரமம் என்றும் அவர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துக்கு முதலீடு, அதை பார்க் செய்ய செலவு, ஓட்டுநர்களுக்கு கூடுதல் சம்பளம் போன்ற சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதற்காக மானியம் வழங்க அரசாங்கம் முன்வந்தால், அதனை பரிசீலனை செய்யலாம் என்றும் அவர்கள் கூறியதாக செய்தி கூறியுள்ளது.

புதிய வருகை தடை – வெளிநாட்டு ஊழியர்கள் தட்டுப்பாட்டை கடுமையாகும்