சிங்கப்பூரில் பணியிடங்களில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த அறிக்கை..!!

(Photo : Today)

சிங்கப்பூரில் COVID-19 காரணமாக வேலைகள் குறைக்கப்பட்ட போதிலும் முந்தைய 2 ஆண்டுகளைப் போலவே பணியிடங்களில் நிகழும் இறப்புகளின் எண்ணிக்கைகள் உள்ளதாகவும் இருப்பதாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) திங்களன்று (செப்டம்பர் 28) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சில பணியிடங்களில் வேலைகள் நிறுத்தப்பட்ட போதிலும் முந்தைய இரண்டு ஆண்டுகள் போல் பணியிட இறப்பு எண்ணிக்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் 16 பணியிட இறப்புகள் நிகழ்ந்துள்ளது, இதேபோன்று 2019ஆம் ஆண்டு 17 இறப்புகளும் மற்றும் 2018ஆம் ஆண்டில் 18 இறப்புகள் நிகழத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : MOM

மேலும், இந்த ஆண்டின் முதல் பாதியில் குறைவான பணியிட காயங்கள் காணப்பட்டுள்ளது, இது 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பணியிட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்று MOM தெரிவித்துள்ளது.

மோசமாக ஏற்படும் காயங்களைப் பொறுத்தவரை, உயரங்களில் இருந்து விழுவது மற்றும் வாகனம் தொடர்பான சம்பவங்கள் முக்கிய காரணங்களாக உள்ளதாக MOM தெரிவித்துள்ளது.

Source : MOM

இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அக்டோபர் மாதம் முதல் இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்.!!

வாகனம் தொடர்பான இறப்புகள் 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில் நான்கு இறப்புகள் பதிவாகியிருந்தது, இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் மூன்று இறப்புகளாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் பாதியில் இயந்திரங்கள் மேலே விழுந்து ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது, இது கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 90ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானத் துறையில் அபாயகரமான மற்றும் பெரிய காயங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இது கட்டுமான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்று MOM தெரிவித்துள்ளது.

Source : MOM

கட்டுமானத் துறையில், 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 29 இறப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த ஆண்டு இதே காலத்தில் 67 இறப்புகள் பதிவாகிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, தொழில் சார்ந்த நோய்களின் எண்ணிக்கை 26 சதவீதம் குறைந்துள்ளது, இது 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 264ஆக இருந்தது, இந்த ஆண்டின் முதல் பாதியில் 195ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்கள் பணியிடத்தையும் பணியாளர்களையும் COVID-19 நோயிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் அதிக முயற்சிகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலையின்போது கீழே விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – இழப்பீடு கோரி வழக்கு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…