சிங்கப்பூரில் இந்த மாதத்தில் மட்டும் 7 வேலையிட மரணங்கள்..!

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 7 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஆண்டு முழுவதும் ஏற்பட்ட 30 இறப்புகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் வேதனையானது என்று மனிதவள மூத்த அமைச்சர் ஜாக்கி முஹமத் திங்களன்று (பிப். 22) தெரிவித்தார்.

உட்லேண்ட்ஸில் கடை ஒன்றில் நகைகளை திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது

விபத்து நடந்த துறைகள்

கட்டுமானம், போக்குவரத்து மற்றும் சேமிப்பு மற்றும் கடல் உள்ளிட்ட துறைகளில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்று திரு ஜாக்கி கூறினார்.

பிப்ரவரி மாதத்தில் நடந்த 7 விபத்துக்களில் 3 ஊழியர்கள் உயரத்தில் இருந்து விழுந்தனர், 3 பேர் பொருள்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டனர் மற்றும் வேலை தொடர்பான விபத்தில் சிக்கி ஒருவர் இறந்ததாக WSH கவுன்சில் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அதிக கவனம்

மனிதவள அமைச்சகம் கூடுதலாக அமலாக்க நடவடிக்கையை உயரத்தில் இருந்து வேலை செய்யும் இடங்களில் மேற்கொள்ளும், மேலும் இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்தும் அதிக கவனம் செலுத்தும் என்று திரு ஜாக்கி கூறினார்.

வரும் மாதங்களில் கட்டுமானம், உற்பத்தி மற்றும் கடல் போன்ற அதிக ஆபத்துள்ள துறைகளில் அமைச்சகம் அதிக கவனம் செலுத்தும் என்றார்.

மேலும், ஊழியர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுக்க அமைச்சகம் தயங்காது என்று திரு ஜாக்கி எச்சரித்தார்.

இனி திருச்சி – சிங்கப்பூர் இடையே தினசரி விமானங்களில் பறக்கலாம்!!