2 நாளில் மூன்று ஊழியர்கள் வேலையிடத்தில் உயிரிழப்பு – கட்டுமான பாதுகாப்பு குறித்த மறுஆய்வு…!

Indian Construction worker death in accident at spore
(PHOTO: TODAY)

சிங்கப்பூரில் இந்த வாரம் இரண்டு நாட்களில் மட்டும் மூன்று வேலையிட விபத்துக்கள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வேலையிடங்களில் முழுமையான பாதுகாப்பு பயிற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்

பாதுகாப்பு நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டி, வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) கவுன்சில் மற்றும் சிங்கப்பூர் கான்ட்ராக்டர்கள் அசோசியேஷன் லிமிடெட் (SCAL) ஆகியவை அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த சமீபத்திய வேலையிட இறப்புகள் குறித்து அந்த அமைப்புகள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

இறப்புகள்

அந்த மூன்று சம்பவங்களில் முதலாவது சம்பவம் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்துள்ளது.

WSH கவுன்சிலின் வலைத்தளத்தின் படி, ஒரு ஊழியர் லிப்ட் வேலையின் பொது இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே துணை மருத்துவர்களால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டார்.

கடந்த செவ்வாயன்று, ஊழியர் ஒருவர் கட்டுமான தளம் ஒன்றில் ஃபார்ம்வொர்க் பேனல்களை சோதித்துக்கொண்டிருந்தபோது, கீழே தரையில் விழுந்தார்.

பின்னர், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.

மூன்றாவது சம்பவம் கடந்த செவ்வாயன்று, குழாயில் வெல்டிங் செய்யும் ஊழியர் சம்மந்தப்பட்டது. பின்னர், அவர் மருத்துவமனையில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து மனிதவள அமைச்சு விசாரித்து வருகிறது.

மறுஆய்வு செய்ய வேண்டும்

கட்டுமான நேரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.

கட்டமைப்புகளின் உறுதித்தன்மையை சரிபார்க்கவும், இயந்திரங்கள், மின் அமைப்புகள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதும் இதில் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 காரணமாக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு பணிக்கு வரும் ஊழியர்கள், தங்கள் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

12 பேருடன் உணவகத்திற்கு சென்ற புதிதாக பாதிக்கப்பட்ட தொற்று நோயாளி!

லட்சுமி விலாஸ் வங்கி இனி DBS வங்கி கிளைகளாக செயல்படும்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…