வேலையிடங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் தீவிரம்

(Photo: RFID)

வேலையிடங்களுக்குத் திரும்பும் ஊழியர்களின் அனுமதிக்கப்பட்ட விகிதம் மே 8 முதல் 30 வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே வேலையிடத்திற்கு திரும்புவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ஊழியர்களை பேருந்துகளுக்கு மாற்றுவது சுலபமல்ல”

முன்பு, ஊழியர்களின் அனுமதிக்கப்பட்ட விகிதம் 75 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல வேலையிடத்தில் சமூக ஒன்றுகூடல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலில், உதாரணமாக உணவு இடைவேளையின்போது 5 ​​பேருக்கு மேல் ஒன்றுகூட அனுமதி இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

பேருந்து மோதிய விபத்தில் சைக்கிள் ஓட்டி மரணம்