வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாடலை வெளியிட்ட சிங்கப்பூர்க் கலைஞர்கள்..!

(Photo: Dailytimes)

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்காக 25க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் கலைஞர்கள் சேர்ந்து பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளனர்.

“நாளை நமதே” என்ற இந்த பாடல் ஊழியர்கள் மன தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்க வழிவகுப்பதாய் அமைந்துள்ளது.

இதையும் படிங்க : சில நகரங்களில் இருந்து வரும் SIA, சில்க் ஏர் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாக செல்ல அனுமதி..!

மீடியாகார்ப் வசந்தம் கலைஞர்கள் மற்றும் நட்சத்திரங்கள், Project Brothers என்னும் திட்டத்தின் மூலம் இந்த பாடலைப் பாடியுள்ளனர்.

அந்த பாடலை வெளிநாட்டு ஊழியர்களும் மற்றும் பொதுமக்களும் பாடி, காணொளியாக வாட்ஸ் ஆப் மூலம் 9678 8968 என்ற எண்ணிற்கு ஜூன் 14ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

Naalai Namathey MV

A special dedication by our very own Mediacorp Vasantham Singers to all our migrant workers in Singapore.நம் உடன்பிறவாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஓர் அர்ப்பணம்!நம்ம வசந்தம் கலைஞர்கள் பாடியதைக் கேட்டீங்க!உங்களுக்கும் பாடும் திறமை கண்டிப்பா இருக்கும்! நீங்களும் இதே மாதிரி ‘நாளை நமதே’ பாடல் வரிகளைப் பாடி, அதை ஒரு காணொளியா பதிவுசெஞ்சி, 96788968 என்ற எண்ணுக்கு Whatsapp பண்ணுங்க. Hashtag #BrothersInRed போட மறந்துடாதீங்க.நீங்க அனுப்புற காணொளி எல்லாம் ஒரு பாடல் தொகுப்பா விரைவில வெளியிடப்படும்.இப்பவே WhatsApp அனுப்புங்க! 96788968!#SingaporeTogether #SGUnited

Posted by Mediacorp Oli 968 on Sunday, May 31, 2020

சமர்பிக்கப்பட்ட காணொளிகள் அனைத்தும் ஒரே காணொளியாக மாற்றப்பட்டு ஒலி 96.8ன் முகநூல் பக்கத்தில், இந்த மாத இறுதியில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!