“இந்தியர்களே நாடு திரும்புங்கள், கொரோனாவை பரப்பாதீர்கள்” என கூச்சலிட்டதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

(photo: mothership)

தன்னை சிங்கப்பூரை சேர்ந்தவராக அடையாள படுத்திகொண்ட ஒருவர், இந்தியாவை சேர்த்த ஒரு குடும்பத்தை நோக்கி கடுமையாக வார்த்தைகளால், கொரோனாவை இங்கு பரப்பவேண்டாம் என திட்டியதாக காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாசிர் ரிஸ் பீச் பார்க்கில் அரங்கேறி உள்ளது.

அந்த காணொளி காட்சியின்படி, இந்தியாவை சேர்ந்த அந்த குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் காணொளியில் பதிவாகாத அவர்களது 11 வயது மகன் மற்றும் 7 வயது மகள் உள்ளனர். இந்த காணொளியை பதிவிட்டவர் மனைவி ஆவார்.

ஊழியர்களின் போக்குவரத்து முறைகளில் மாற்றம், கட்டுமான துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அமைச்சர் விளக்கம்

இந்த காணொளியை மின்னஞ்சலுடன் இணைத்து, நாங்கள் சிங்கப்பூருக்கு வந்த 10 வருடங்களில் இதுவே முதல் முறையாக எங்கள் மீது இது போன்ற வெளிப்படையாக இனம் சார்ந்த வார்த்தைகள் தொடுக்கப்பட்டதாக மனைவி mothership.sg ஆன்லைன் ஊடகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அந்த பெண் குறிப்பிட்டு இருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் காணொளி காட்சியின்படி, சாம்பல் நிற சட்டை அணிந்திருப்பவர். அவர் நாங்கள் இருக்கும் திசை நோக்கி அவதூறாக இந்தியர்களே நாடு திரும்புங்கள் இங்கு கிருமியை பரப்பாதீர்கள், என சத்தமிட்டதாக மனைவி கூறியிருந்தார்.

இந்த தம்பதியினர் அவர்களை கடந்து சென்ற பிறகும், அந்த ஆடவர் இவர்களை நோக்கி வசைபாடியதாகவும், அவ்வாறு கூற வேண்டாம் என அந்த பெண்ணின் கணவர் கூறியபோது, தொலைபேசியை எடுத்து உங்களை காணொளியாக பதிவிட்டு சமூக ஊடகங்களில் கிருமியை பரப்பும் இந்தியர்கள் என பதிவிடுவேன் என கூறியதாக தெரிகிறது.

உடனே, அந்த பெண் தன்னுடைய தொலைபேசி எடுத்து நாங்களும் உங்களை பற்றி பதிவிடுவோம் என கூறி, காணொளியாக பதிவிட தொடங்கியவுடன், அந்த ஆடவர் எங்களை இன முறையில் வசைபாடியதை நிறுத்திவிட்டு, முகக்கவசம் ஏன் அணியவில்லை என மாறி பேசியதாக அந்த பெண் கூறியிருந்தார்.

நாங்கள் முககவசம் அணிந்து இருந்ததாகவும், நீர் அருந்துவதற்காக மட்டுமே கழட்டினோம் என அந்த பெண் தன்னிடம் உள்ள விளக்கத்தை கொடுத்திருந்தார்.

காணொளி முழுவதுமே அந்த ஆடவர் தான் சிங்கப்பூரை சேர்த்தவன் எனவும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன் என கூறிக்கொண்டு உங்களின் குடியுரிமை எது என கேள்வி எழுப்பியதாக, அந்த பெண் கூறியிருந்தார்.

அவர் விடாமல் இந்தியர்களே நோயை பரப்பாதீர்கள், என கத்தியவுடன் தான் பதிவிடுவதை நிறுத்தியதாக அந்த பெண் கூறினார். அதன் பின்னர், அங்கு இருந்த சிலர் அவரை தடுக்க முற்பட்டபோதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை என அந்த பெண் தெரிவித்திருந்தார்.

இரண்டரை நிமிடங்கள் அந்த காணொளி பதிவாகி உள்ளது. இந்தியாவில் தொற்று அதிகரித்துவருவதால் இந்தியர்கள் மூலம் மட்டுமே தொற்று பரப்பப்படும் என்ற அடிப்படை சிந்தனை அனைவருக்கும் இருக்கும் என, அதுவே இந்த நிகழ்விற்கு காரணமாக கூட இருக்கலாம் என அந்த பெண் தெரிவித்திருந்தார்.

இந்த மாதம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை…!

Verified by MonsterInsights