சிங்கப்பூரில், யார் என்றே தெரியாத ஒருவருக்கு கல்லீரல் கொடுத்து உதவிய மாமனிதர்.!

Eddie Tan என்பவர் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி மோசமான நிலையில் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவருடைய மகனின் முயற்சியால் அவருக்கு முகநூல் வாயிலாக டோனர் கிடைத்து, தற்போது கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து நலமுடன் உள்ளார்.

59 வயதான முன்னாள் புராஜக்ட் மேனேஜர் Eddie Tan என்பவர் புதிய வாழ்க்கையை பெற்றுள்ளார். முகநூலில் பதிவு செய்த 8 வது நாளில் ஒரு புதிய, யார் என்றே தெரியாத நபர் மூலம் இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு இவரின் மகன் Leslie (24) இன் முகநூல் பதிவு காரணம் ஆகும்.

கடந்த மே 30 ஆம் தேதி Tan சுமார் 8 மணிநேரம் நேஷனல் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் இந்த ஆபத்தான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

கல்லீரல் உதவி செய்ய முன்வந்தவர் சிங்கப்பூரை சேர்ந்த Lin Hanwei (வயது 36) என்பவர் ஆவார். இவர் AXA இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிதி சேவை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு இவர் 5 அரை மணி நேரம் உட்படுத்தப்பட்டார்.

Lin Hanwei குடும்பம் முழுவதும் மற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணம் செய்யக்கூடியவர்கள் என்றே கூறலாம். இவருடைய தம்பி இதே நேஷனல் மருத்துவமனையில் 7 வருடத்திற்கு முன்பு தன்னுடைய சிறுநீரகத்தை தானம் செய்தார் அதுவும் யார் என்றே தெரியாத ஒருவருக்கு என்பது குறிப்பிடத்தக்கது.