சிங்கப்பூரை சேர்ந்த நபர் வெளிநாட்டு பயங்கரவாதத்தை ஆதரிக்க பணம் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.!!

islamic state group

34 வயதான சிங்கப்பூரை சேர்ந்த நபர் செப்டம்பர் 16 அன்று பயங்கரவாத நோக்கங்களுக்காக பணம் வழங்கியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

வர்த்தக விவகார துறையின் விசாரணையில், அகமது ஹுசைன் என்பவர் 2016 ஜூலை 26, மற்றும் செப்டம்பர் 3, 2016 அன்று முறையே S$ 1,059 மற்றும் US$62 (S$ 86) ஆகியவற்றை பயங்கரவாத செயல்களுக்கு உதவுகின்ற நோக்கில் ஒரு தனிநபருக்கு பணம் வழங்கியதாக கண்டறியப்பட்டதை அடுத்து இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விசாரணையில், ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சிரியாவில் ஆயுத வன்முறைகளை மேற்கொள்ள விரும்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஹுசைன் ஏற்கனவே (ஆகஸ்ட் 2018) உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ISA) கீழ் காவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.