கோரோனோ வைரஸ் (COVID-19); சிங்கப்பூரர்களுக்கு பயண ஆலோசனை..!

Singaporeans advised to defer non-essential travel to South Korea
Singaporeans advised to defer non-essential travel to South Korean cities affected by COVID-19: MOH

தென்கொரியாவின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, Daegu, Cheongdo ஆகிய பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி சுகாதார அமைச்சகம் (MOH) ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும், அந்நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் கவனமுடன் இருக்குமாறும் கூடுதலாக MOH அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 – டாக்ஸி ஓட்டுநர் உட்பட மேலும் 2 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்..!

தென் கொரியா ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 602 கொரோனா வைரஸ் சம்பவங்களை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஐந்து உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.

வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களில் 306 பேர் டேகுவில் உள்ள ஷிங்சியோஞ்சி (Shincheonji) தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் 114 பேர் சியோங்டோ நகரின் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள்.

அந்த இரு நகரங்களிலும் கிருமித்தொற்று சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த பயண ஆலோசனையை MOH வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவிற்கு மருத்துவப் பொருள்களை அனுப்பியுள்ள சிங்கப்பூர்..!