சிங்கப்பூரர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் செல்ல முடியும் – எந்த நாட்டுக்கு தெரியுமா?

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

சிங்கப்பூரர்கள் விசா இல்லாமல் செப். 29 முதல் 30 நாட்கள் வரை தைவானுக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 நாட்கள் வரை கால அவகாசத்துடன் விசா இல்லாமல் தங்குவதற்கு தகுதிபெறும் நாடுகளின் பட்டியலை தைவான் புதுப்பித்துள்ளது. இதில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரே இரவில் கோடிஸ்வரனான ஊழியர் – “என் நாட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே வேலைசெய்வேன்” என ஊழியர் பெருமிதம்

இந்த அறிவிப்பை தைவானின் தூதரக விவகாரங்களுக்கான தூதரகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் அக்டோபர் 13 க்குள் கட்டாய கோவிட்-19 தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவர தைவான் திட்டம் கொண்டுள்ளது.

அதே போல இந்த செப்டம்பர் இறுதி வாரத்திலிருந்து பிற கட்டுப்பாடுகளையும் அது தளர்த்தும் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பயணிகள் தைவான் வந்தவுடன் ஏழு நாட்கள் தங்களை தாங்களே சுயமாக கண்காணிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம்… மீறினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தான் பாதிப்பு