வூஹான் வைரஸ்; “அமைதியாகவும் ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும்” – பிரதமர் லீ…!

Singaporeans should be ‘calm but watchful’ after first Wuhan virus case, says PM Lee in Chinese New Year message

Wuhan virus : சிங்கப்பூரில் சீன மனிதருக்கு வூஹான் வைரஸ் முதன்முதலில் உறுதிப்படுத்தப்பட்டது, இந்நிலையில் பிரதமர் லீ ஹ்சியன் லூங் சிங்கப்பூரர்கள் அமைதியாகவும், கவனமாகவும் இருக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

“அனைவரையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால், சிங்கப்பூரர்கள் அமைதியாகவும் ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும்” என்று பிரதமர் லீ ஹ்சியன் லூங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மர்மமான வூஹான் வைரஸ்; முதல் நபரை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்..!

சீனப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது செய்தி குறிப்பில் (ஜனவரி 24) பேசிய திரு லீ, “இந்த புதிய கொரோனா வைரஸைக் கையாள்வதற்கு அரசாங்கம் நன்கு தயாராக உள்ளது” என்றார்.

மேலும், இந்த கொடிய வைரஸ் கிருமி “சீனாவில் குறைந்தது 17 பேரைக் உயிர்பலி வாங்கியுள்ளது மற்றும் இதில் நூற்றுக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்” என்றும் கூறினார்.

Photo Credit : CNA

கடந்த வியாழக்கிழமை, சுகாதார அமைச்சகம் (MOH); சீன, வூஹானைச் சேர்ந்த 66 வயதான ஆடவரும், புதிய கொரோனா வைரஸ் தொற்று சாதகமாக இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தமிழ் எண்களால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூண்டு கோபுரம்!

“சிங்கப்பூரில், நாங்கள் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளியை கண்டுள்ளோம். இங்கு அதிகளவு சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளப்படுவதால் இது எதிர்பார்க்கப்பட்டது, ”என்று திரு லீ கூறினார்.

“ஆனால், நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் 2003ல் SARS வைரஸை கையாண்டதிலிருந்து, இதுபோன்ற இக்கட்டான நிலைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்” என்றார்.