அனுமதி இல்லாமல் ட்ரோன் இயக்கிய இருவர் கைது!

Two men were charged on Friday (5 July) with operating drones without a permit near Paya Lebar Air Base.

Paya Lebar Air Base பகுதியில் அனுமதி இல்லாமல் ட்ரோன் இயக்கிய இருவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிங்கப்பூரை சேர்ந்த Ed Chen Januan (37) என்பவர் DPPOWER FPV வகை ட்ரோன்யை பிளாக் 128 Punggol Field Walk அருகாமையில் அனுமதி இல்லாமல் கடந்த புதன்கிழமை இரவு 9 மணிக்கு இயக்கியுள்ளார்.

இந்த பகுதி Paya Lebar Air Base -யிற்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. Chen பயன்படுத்திய ட்ரோன் எடை 0.375 கிலோ கிராம் ஆகும்.

மற்றொரு நபர் 40 வயதான Tay Miow Seng, இவரும் அதே குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் Bumblebee Wrapped DJI வகை ட்ரோன்யை இயக்கியுள்ளார். இதன் எடை 0.43 கிலோ கிராம், Chen இயக்கிய அதே பகுதியில் அனுமதி இல்லாமல் இவரும் இந்த ட்ரோன்யை இயக்கியுள்ளார்.

அனுமதி பெறாமல் ட்ரோன் கேமராக்களை இயக்கிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து, இருவரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி விடுதலை ஆவார்கள் என்று அவர்களுடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.