புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் மக்கள்; மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட பக்ரீத்!

Photo: MCI

சிங்கப்பூரிலிருந்து ஹஜ் யாத்திரையின் மிக முக்கியமான சடங்கிற்காக மக்காவிற்கு சென்ற 900 யாத்ரீகர்களும் பாதுகாப்பாக சவுதி அரேபியாவின் அரஃபா மைதானத்திற்கு வந்தடைந்துள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் சுல்கிப்லி தெரிவித்துள்ளார்.

இதில் 30 யாத்ரீகர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் குணமடைந்துவிட்டதால் அல்லது லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் சவுதி அதிகாரிகள் அவர்களை புனித பயணத்தை தொடர அனுமதித்ததாக தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த மாதம் உயிரிழந்த தமிழர்… சடலத்தை பெற்றுக்கொள்ள முன்வருமாறு போலீஸ் வேண்டுகோள்

மேலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு மட்டும் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும் அவருக்கு சவுதி அரேபிய அதிகாரிகள் ஹஜ்ஜை நிறைவு செய்வதற்காக எஞ்சியுள்ள சடங்குகளை மேற்கொள்வதற்கு உதவுவார்கள் என்றும் திரு மசகோஸ் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இவ்வருட ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களுக்கு சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சரும், சுகாதார இரண்டாம் அமைச்சருமான திரு மசகோஸ் சுல்கிப்லி தலைமை தாங்கியதாக தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 9 லட்சத்துக்கும் அதிகமான ஹாஜிகள் அங்கு ஒன்றுகூடியதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பக்ரீத் பெருநாள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டதாக சிங்கப்பூர் மக்கள் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் லாட்டரி வாங்கும் குரூப் – பரிசுத்தொகை ரூ.25 கோடி விழுந்தால் எப்படி கிடைக்கும்?