COVID-19: வேலை அனுமதி உடையோர் 853 பேர் பாதிப்பு; 9 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

Singapore's COVID-19 cases cross 12,000 after 897 more confirmed; 9 new clusters identified
Singapore's COVID-19 cases cross 12,000 after 897 more confirmed; 9 new clusters identified

சிங்கப்பூரில் நேற்றைய (ஏப்ரல் 24) நிலவரப்படி, புதிதாக 897 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,000-ஐ கடந்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 12,075ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் 20 பேரை ஒரே அறையில் பூட்டிய தங்கும் விடுதி ஆபரேட்டருக்கு கடுமையான எச்சரிக்கை – MOM

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 19 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

சமூகத்தில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 25 என்று MOH குறிப்பிட்டுள்ளது. இதில் 13 பேர் சிங்கப்பூர்வாசிகள் அல்லது நிரந்தரவாசிகள், 12 பேர் வேலை அனுமதி உடையோர்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 68 சதவீதம், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சியோர், தொடர்புகள் கண்டறியும் பணி நிலுவையில் உள்ளது.

புதிய குழுமங்கள்

சிங்கப்பூர் மேலும் 9 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • Strand Hotel (25 Bencoolen Street)
  • Alaunia Lodge (Admiralty Road West)
  • SSKBJV Dormitory (31A Tanah Merah Coast Road)
  • Westlite Juniper (23 Mandai Estate)
  • Natureland East Coast (907 East Coast Road)
  • 112 Neythal Road
  • 10 Shaw Road
  • 2 Sungei Kadut Avenue
  • 11 Tuas Avenue 10

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்..!