COVID-19: 4 புதிய குழுமங்கள் அடையாளம்; தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 886 பேர் பாதிப்பு..!

Singapore's COVID-19 cases top 13,000 after 931 more confirmed
Singapore's COVID-19 cases top 13,000 after 931 more confirmed

சிங்கப்பூரில் நேற்றைய (ஏப்ரல் 26) நிலவரப்படி, புதிதாக 931 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 13,624ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: COVID-19: நார்த் பாயிண்ட் மாலில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வியாபாரம் இருந்தது..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 25 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் 13 பேர் சிங்கப்பூர்வாசிகள் அல்லது நிரந்தரவாசிகள், 5 பேர் வேலை அனுமதி அட்டை உடையோர்.

இருவர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது. அந்த இரு சிங்கப்பூரர்களும் கடந்த 10ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பியவர்கள். அவர்கள் இருவருக்கும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 74 சதவீதம், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சியோர், தொடர்புகள் கண்டறியும் பணி நிலுவையில் உள்ளது.

புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில் மேலும் புதிதாக 4 குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • 38 Senoko ரோட்டில் உள்ள Proptech Pte Ltd.,
  • 5 கியேன் டெக் கிரசன்ட் (Kian Teck Crescent)
  • 3 சுங்காய் கடுட் ஸ்டிரீட் 6 (Sungei Kadut Street 6)
  • 133 Tuas View Square

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் ஏர்ஷோ மைதானம் தனிமைப்படுத்தப்படும் இடவசதியாக மாற்றம்..!