சிங்கப்பூரில் 1,000- க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

Pic: Today

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 1,000- க்கு கீழ் குறைந்தது.

‘தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு ‘VTL’ விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

சிங்கப்பூரின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (28/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (28/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 747 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 744 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 719 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 25 பேருக்கும் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,383 ஆக உயர்ந்துள்ளது.

மகனுக்கு விலையுயர்ந்த போன் வாங்கிக்கொடுத்த சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை: அதனால் ஏற்பட்ட விபரீதம் – மகன் தற்கொலை

கொரோனா பாதிப்பால் மேலும் 11 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 67 முதல் 98 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,147 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 210 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 82 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மலேசிய பிரதமர் இன்று சிங்கப்பூருக்கு வருகிறார்!

கடந்த நாளில் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 2,061 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் 324 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.