சிங்கப்பூரின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஹாஜி PM முஹம்மது ஷா காலமானார்..!

Singapore's legendary musician Haji PM Muhammad Shah passes away
Singapore's legendary musician Haji PM Muhammad Shah passes away (Photo: Seithi)

சிங்கை வானொலி தொலைக்காட்சி முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றான ஷாஜஹான் இசைக்குழுவின் தலைவரும் முன்னோடி இசைக் கலைஞருமாகிய ஹாஜி P M முஹம்மது ஷா (வயது 90) அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

1970ஆம் ஆண்டுகளில், சிங்கை வானொலி, தொலைக்காட்சியில் இடம்பெற்ற பல இசை நிகழ்ச்சிகளிலும், ஒலி ஒளி, மாலை மதுரம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பாட்டுத் திறன் போட்டிகளிலும் ஷா ஜஹான் இசைக்குழுவினர் இன்னிசை வழங்கிப் புகழ் பெற்றனர்.

ஹாஜி ஷா அவர்கள் எக்கோடியன் (Accordion) இசைக் கருவியை வாசிப்பதில் வல்லவர். இசைக் கலைஞர்கள் பலரை வழி நடத்தி உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.

பல்லாண்டு காலம், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் அவர் சமுதாயச்சேவை ஆற்றியுள்ளார்.

Source: seithi