சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் 4.5 விழுக்காடாக உயர்வு.!

Singapore's resident unemployment rate rose to 4.5% in August
Pic:Mothership.sg

சிங்கப்பூர் வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 0.4 விழுக்காடு உயர்ந்து 4.5 விழுக்காட்டை எட்டியிருப்பதாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (07-10-2020) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட 0.3 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டிலும் இது கூடுதலாக உள்ளது.

அப்போது சிங்கப்பூர்வாசிகளுக்கான வேலையின்மை விகிதம் 4.1 விழுக்காடாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக உணவுப் பொருள்களை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு அபராதம்..!

இதுகுறித்து மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறுகையில், வேலையின்மை விகிதம் அடுத்த சில மாதங்களுக்கு இப்படியே இருக்குமா அல்லது வேகம் அடையுமா என்பதை இப்போது எங்களால் சொல்ல முடியாது என தெரிவித்தார்.

மேலும், முந்தைய பொருளியல் மந்தநிலை காலக்கட்டத்தின்போது நிலவிய வேலையின்மை விகிதங்களைக் காட்டிலும் தற்போது உள்ள மாதாந்திர விகிதம் குறைவாகும்.

இருப்பினும், வேலையின்மை விகிதம் மாதத்திற்கு மாதம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் கிருமிப்பரவலின்போது வேலையின்மை விகிதம் செப்டம்பரில் 6.2 விழுக்காடாக இருந்ததுள்ளது என்றும், 2009ஆம் ஆண்டு செப்டம்பரில் அனைத்துலக பொருளியல் நிதி நெருக்கடி நேரத்தில் இந்த விகிதம் 4.9 விழுக்காடாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும் பிற வாகனங்கள் பறிமுதல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…