சிங்கப்பூர் “தமிழின் பெருமை” மூத்த எழுத்தாளர் A.P ராமன் அவர்களின் 87வது பிறந்தநாள் கொண்டாட்டம்..!

Singapore's Tamil Pride Senior A.P.Raman 87th Birthday Celebrations

சிங்கப்பூர் “தமிழின் பெருமை” மூத்த எழுத்தாளர் A.P ராமன் அவர்களின் 87வது பிறந்தநாள் (அக்ட்.05) கொண்டாட்டம், சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் எதிரில் உள்ள ஆனந்தபவன் உணவகத்தின் 2-ஆம் தளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் தூதர் கேசவபாணி, நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இர்ஷாத், அமைப்புத் தலைவர்கள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரான A.P ராமன் அவர்கள் முகநூலில் அரிய பல தகவல்களை உடனுக்குடன் வழங்கி வருவது நாம் அறிந்த ஒன்றுதான். புதிய செய்திகளையும், பழைய செய்திகளையும் தந்து இளையோர்களை விட அதிகமாக இந்த வயதிலும் உழைக்கும் ஆற்றல் பெற்றவர். மேலும், A.P ராமன் அவர்கள் சிங்கப்பூரில் நடக்கும் அனைத்து தமிழ் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ள கூடியவர்.

தமிழ் இளைய தலைமுறைக்கு இவர் ஒரு மாபெரும் வழிகாட்டி, அய்யா அவர்கள் நீடூழி வாழ்ந்து தமிழ் தொண்டாற்ற வேண்டும் என்று பலர் நேரிலும், முகநூல் வாயிலாகவும் வாழ்த்து கூறி வருகின்றனர்.