சிங்கப்பூரில் கணவர் உயிரிழப்பு – குழந்தையை வளர்க்க பாடுபடும் மனைவி!

(photo: mothership)

ஜோஹர் பஹ்ருவை சேர்ந்த க்ளோரி என்ற பெண், தன் கணவரை விபத்தில் இழந்தவுடன், தனக்கென சிறிதாக உணவு விற்பனை கடையை அமைத்துக்கொண்டுள்ளார். தன்னுடைய குழந்தையை வளப்பதற்காக அந்த பெண் மேற்கொண்ட முயற்சியே அந்த கடை.

க்ளோரி செல்வதுரை தனது கணவனை இழந்த பின் தன் மகனுக்காக கடையை திறந்ததாக கடந்த மே 3ஆம் தேதி, பூனம் பிள்ளை என்பவர் அவரது முகநூலில் பதிவிற்றிருந்தார்.

2,750 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என உறுதி

மேலும் பூனம் கூறுகையில், க்ளோரி தன் கணவனை கடந்த ஆகஸ்ட் மாதம் இழந்ததாகவும், அதே மாதம் அவர் தன் சிறு தொழிலை துவங்கியதாகவும் தெரிவித்தார்.

க்ளோரியின் கணவர் சிங்கப்பூரில் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற தகவல் மட்டுமே, அவரின் கணவனை பற்றி தெரியும் என அந்த பதிவில் பூனம் தெரிவித்திருந்தார்.

அண்மையில் காலில் காயமடைந்து அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஆறு மாத காலம் ஓய்வில் க்ளோரி இருந்ததாக பூனம் பதிவிற்றிருந்தார்.

க்ளோரியின் கடையான JG நாசி லெமாக் கார்னெர்க்கு பூனம் இந்த வார தொடக்கத்தில் சென்றதாகவும், அங்கு தன் தோழி க்ளோரி தன் வலியையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார் எனவும் அவர் கூறினார்.

க்ளோரி பூனமிடம், “வலியையும் தாண்டி தான் வாழ்கை நடத்த வேண்டும், என் மகனை நான் நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும்” என கூறினாராம்.

இது ஒரு கடை என்பதைத் தாண்டி தாய் தன் மகனின் வாழ்க்கைக்காக பல இன்னல்களைக் கடந்து மேற்கொள்ளும் முயற்சி இதுவாகும்.

ஜெரூசலத்தில் வன்முறை – ஆழ்ந்த அக்கறை தெரிவித்த சிங்கப்பூர்