நீங்கள் எடுத்து வைக்கும் அடிக்கு ஏற்ப மொபைல் டேட்டா – Singtel மற்றும் AIA அதிரடி அறிவிப்பு!

Singtel and AIA are giving customers mobile data if they walk around more

அதிகமாக நடந்தால் Singtel மற்றும் AIA நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மொபைல் டேட்டா தருவதாக அறிவித்துள்ளது.

Singtel நிறுவனம் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒன்றுசேர்ந்து கொண்டு StepUp என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக Postpaid வாடிக்கையாளர்கள் மொபைல் டேட்டா வசதி பெறலாம்.

வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம், உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு StepUp என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வரும்காலங்களில் டிஜிட்டல் வாழ்க்கைக்கு ஏற்றவாறு புதிய திட்டங்களை கொண்டுவர Singtel மற்றும் AIA நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Singtel வாடிக்கையாளர்கள் StepUp மூலம் 3GB மொபைல் டேட்டா பெறலாம். இது அவர்கள் தினமும் எடுத்து வைக்கும் அடியை பொறுத்தது. எடுத்துக்காட்டாக ஒரு வாடிக்கையாளர் தினமும் 10,000 அடிகள் அல்லது அதற்கு மேலாக நடந்தால் 3GB மொபைல் டேட்டா பெறுவார். ஒரு மாதத்தில் தினமும் 5,000 முதல் 7,500 வரை நடந்திருந்தால், அவர் 1GB மொபைல் டேட்டா பெறுவார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் Singtel வாடிக்கையாளர்கள் StepUp மூலம் AIA vitality சேலஞ்சில் பங்கேற்கலாம், அதில் “மூவி டிக்கெட், சவாரி செய்யும் வவுச்சர்கள்” ஆகியவை அடங்கும். AIA Vitality Challenge என்பது காப்பீட்டு நிறுவனத்தின் முதற்கட்ட முயற்சியாகும், இது அதன் உறுப்பினர்களை சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிக்கும் வகையில் 2017 இல் தொடங்கியதாகும்.

யாரெல்லாம் தகுதியானவர்கள் ?

Combo, XO மற்றும் SIM ஆகிய திட்டங்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் my Singtel என்ற app மூலம் Stepup-ல் இணைய தகுதியானவர்கள்.

My Singtel app மூலம் Stepup வழியாக புள்ளிகள் தினமும் கண்காணிக்கப்படும்.

1000 புள்ளிகள் பெறுபவர்கள் 1GB மொபைல் டேட்டா பெற தகுதியடைவார்கள்.

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 3000 புள்ளிகள் பெற்று 3GB மொபைல் டேட்டாவை பெறலாம்.

Stepup மூலம் எடுத்த மொபைல் டேட்டா Billing சுழற்சி முறையில் வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்துவிட்டால் அன்றைக்கான புள்ளிகள் வழங்குவது நிறுத்தப்படும்.

உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு சராசரியாக 7,500 அடிகள் கடந்தால் ஒரு நாளைக்கு 60 புள்ளிகள் பெறுவார். 30 நாட்களில் அவர் மொத்தம் 1,800 புள்ளிகளை (60 புள்ளிகள் x 30 நாட்கள்) பெற்று 1GB மொபைல் டேட்டா பெற தகுதிபெறுவார்.