சிங்கப்பூர் வந்தடைந்த Sinovac கோவிட்-19 தடுப்பூசிகள் – இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை!

(AFP via Getty Images)

சிங்கப்பூருக்கு Sinovac கோவிட் -19 தடுப்பூசிகள் நேற்று (பிப். 23) வந்தடைந்தது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை சிங்கப்பூரில் பயன்படுத்த இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் MOH குறிப்பிட்டது.

துவாஸ் தொழில்துறை கட்டடத்தில் தீ: உதவிக்கு விரைந்து சென்ற வெளிநாட்டு ஊழியர்கள்

மேலும், சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) அதன் மதிப்பீட்டு தகவல்களை பெறுவதற்காக காத்திருக்கிறது.

சீனாவின் Sinovac பயோடெக் உருவாக்கிய இந்த தடுப்பூசிக்கு, அந்நாட்டில் பொதுவான பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, இது ஏற்கனவே ஹாங்காங் மற்றும் இந்தோனேசியாவில் பயன்பாட்டில் உள்ளது.

தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்த பிறகு HSA அனைத்து அறிவியல் சோதனைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இதுவரை இரண்டு COVID-19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PIE நெடுஞ்சாலையில் லாரி, பேருந்து மோதி விபத்து – 12 பேர் மருத்துவமனையில் அனுமதி