சிங்கப்பூரில் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது..!

Eight suspects arrested for dangerous driving and illegal driving on Kallang-Baya Lebar Highway
Eight suspects arrested for dangerous driving and illegal driving on Kallang-Baya Lebar Highway. (Photo: SG Road Vigilante)

சிங்கப்பூர்: கல்லாங்-பயா லெபார் அதிவேக நெடுஞ்சாலையில் (KPE) ஆபத்தாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை (மே 24) தெரிவித்துள்ளனர்.

சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 344 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!

“சட்டவிரோத பந்தயம் மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயலாகும், இது கடுமையான அல்லது ஆபத்தான போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்” என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் குற்றச்செயலுக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், S$3,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தை செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் S$10,000 அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

COVID-19 பாதுகாப்பான இடைவெளி மீறியதற்காகவும் எட்டு நபர்களும் விசாரணையில் உள்ளனர்.

இதையும் படிங்க : தன்னுடைய கணவர் இறந்த செய்தியை கேட்டு, பேருந்தை நிறுத்திவிட்டு கதறி அழுத பேருந்து ஓட்டுநர்..!