MRT ரயிலில் முகக்கவசத்தை இழுத்துவிட்டு சாவகாசமாக புகைபிடித்த நபர் (வீடியோ) – போலீசில் புகார் செய்த SMRT

Man openly vaping MRT
sgfollowsall/Insta

ரயிலில் முகக்கவசம் அணியாமல் சாவகாசமாக புகைபிடித்த நபர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நிறுவனம் SMRT இன்று (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஏப்ரல் 8 அன்று இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டது, அது குறித்து நாம் பதிவிட்டு இருந்தோம்.

MRT ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து, தன் பிறப்புறுப்பை காட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்

MRT ரயிலில் ஆடவர் ஒருவர் தனது முகக்கவசத்தை இழுத்து கீழே விட்டுவிட்டு, சாவகாசமாக தனது கைபேசியை பார்த்தபடி, Vaping கருவி மூலம் புகை இழுத்துக்கொண்டிருக்கும் வீடியோ வலைத்தளங்களில் வெளியானது.

ரயிலில் முகக்கவசம் அணியாத ஆடவர் இ-சிகரெட்டைப் புகைக்கும் வீடியோ குறித்து சமூக ஊடகங்களில் தெரிந்துகொண்டதாக அது கூறியது.

மேலும், இதுபற்றி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் என்று CNA வின் கேள்விகளுக்குப் பதிலளித்த SMRT-ன் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி மார்கரெட் தியோ கூறினார்.

மேலும், மற்றவர்கள் பாதிக்கப்படும் வகையில் இருக்கும் இதுபோன்ற நடத்தைகளை SMRT கடுமையாக பார்க்கும் என்று அவர் கூறினார்.

சட்டத்திற்கு புறம்பானது

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்தில் புகைபிடிப்பது சட்டத்திற்கு புறம்பானது.

இதில் பிடிபடும் குற்றவாளிகளுக்கு S$200 அல்லது நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

2018 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், சிங்கப்பூரில் இ-சிகரெட் vaporisers கருவிகளை வைத்திருப்பது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும்.

திருட்டு சம்பவம் தொடர்பாக இரு பெண்களை தேடிவரும் சிங்கப்பூர் போலீஸ்