சிங்கப்பூர் கடல்வழி பாதுகாப்பு ; புதிய 3 கப்பல்கள் பெருமையுடன் வரவேற்பு!

SCDF proudly welcomed three new vessels into the Marine Division fleet – the Heavy Fire Vessel (HFV), the Heavy Rescue Vessel (HRV), and the Marine Rescue Vessel (MRV).

Heavy Fire Vessel (HFV), the Heavy Rescue Vessel (HRV), and the Marine Rescue Vessel (MRV) ஆகிய மூன்று புதிய கப்பல்களை SCDF கடற்படை பெருமையுடன் வரவேற்றது.

உள்துறை விவகாரங்கள் அமைச்சரும் சட்ட அமைச்சருமான திரு.கே சண்முகம் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரது மனைவி டாக்டர். சீதா சுப்பையா அவர்கள் இவ்விழாவை தொடங்கி வைத்தார்.

Red Sailfish என்ற குறியீட்டு பெயரில் உள்ள HFV, உலகின் மிக சக்திவாய்ந்த தீயணைப்பு கப்பல் ஆகும். இதன் 12, நீர் மற்றும் நுரை மானிட்டர்கள் 360° கோணத்தில் தீயணைப்பில் பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு மிக அதிக திறன் கொண்டது.

Red Sailfish

இதனால் நிமிடத்திற்கு மொத்தம் 240,000 லிட்டர் நீரை வெளியேற்ற முடியும். மேலும், இதன் டைனமிக் பொசிஷனிங் சிஸ்டம் கப்பல் தானாகவே தனது நிலையை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது.

Red Manta என்ற குறியீட்டு பெயர் கொண்ட HRV, 300 பயணிகளைக் உடன் கொண்டு செல்லும் திறன் கொண்ட இந்த கப்பல், கடலில் ஏற்படும் பெரிய விபத்துகளை பாதுகாக்க ஏற்ற கப்பல் ஆகும்.

Red Manta

கடைசியாக, Red Dolphin என்ற குறியீடு கொண்ட MRV வகை கப்பல் வேதியல் உயிரியல் மற்றும் கதிர்வீச்சு வடிகட்டுதல் அமைப்பு கொண்டது.

Red Dolphin

கூடுதலாக, 3 கப்பல்கள் இணைவது சிங்கப்பூரின் கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும், மேலும் SCDF கடல்சார் தீயணைப்பு திறன்களை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.