சிங்கப்பூரில் ஜூலை 22 முதல் நடப்புக்கு வரவுள்ள 2ஆம் கட்டம்

(Photo: Valerie Ng)

சிங்கப்பூரில் நாளை மறுநாள் (ஜூலை 22) முதல் அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை, மீண்டும் 2ஆம் கட்டம் நடப்புக்கு வரவுள்ளது.

சமூக ஒன்றுகூடலுக்கான அனுமதிக்கப்பட்ட குழு அளவு ஐந்து நபர்களிலிருந்து (ஜூன் 14 முதல் நடைமுறையில் உள்ளது) அதிகபட்சம் இரண்டு நபர்களாகக் குறைக்கப்படும்.

உணவு, பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிட ஜூலை 22 முதல் அனுமதி இல்லை

ஒரு நாளில் ஒரு வீட்டுக்கு 2 விருந்தாளிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடரும், அதனை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திரையரங்குகளுக்கு 100 பேர் மட்டும் செல்ல முடியும். செல்வோர் அனைவரும் PET பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். பரிசோதனை இல்லை என்ற பட்சத்தில் அதிகபட்சமாக 50 பேர் வரை அனுமதிக்கப்படலாம்.

அதே போல, உணவு, பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிட நாளை மறுநாள் முதல் (ஜூலை 22) அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை அனுமதி இல்லை.

அனைத்து உணவு, பான நிலையங்களிலும், உணவு வாங்கிச்செல்லுதல் மற்றும் டெலிவரி மட்டுமே அனுமதிக்கப்படும்.

ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி சம்பவம்: மாணவனுக்கு எப்படி கோடாரி கிடைத்தது? – அமைச்சர் விளக்கம்