வெளிநாட்டு ஊழியர்களின் மன உளைச்சலைப் போக்க இணையம் வழி பாடல் போட்டி..!

(Photo: ROSLAN RAHMAN/AFP via Getty Images)

காக்கி புக்கிட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சுமார் 5 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு, பாடல் போட்டி பயனுள்ளதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஊழியர் ஹோசைன் முகமது காஸி மோஸுமால் (Hossain Md Kazi Mozummal) தன்னுடைய வேலைக்குத் திரும்பிய ஒரு சில நாளில் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனை நடவடிக்கையில் 8 பேர் கைது..!

அவர் தங்கியிருந்த விடுதியில், ஊழியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால், வேறொரு தங்கும் இடத்தில் இரு வாரங்கள் தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அவர் TODAYவிடம் கூறுகையில், ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதை போல் இருந்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், பங்களாதேஷ் வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பாடல் போட்டி ஒன்று அவருக்கு பயனுள்ள வகையில் அமைந்தது. பிலால் கான் ( Billal Khan) என்ற ஊழியர், “Overseas Foreign Workers Singapore” என்ற Facebook பக்கத்தை நிறுவி அதில் பாடல் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் Facebook உதவியுடன், தன்னை போன்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் வகையில் பல தொண்டூழியப் பணிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறார், அதில் ஒன்றாக இந்த பாட்டுப் போட்டி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் வெற்றிபெறும் ஊழியருக்கு 500 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு சுமார் 180 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளுக்கு உரிய அனுமதி இல்லாமல் மதுபானம், சிகரெட் கொண்டு செல்வோர் மீது கடும் நடவடிக்கை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…