எட்டு நாட்கள் சுற்றுப்பயணம், அதில் ஏழு நாட்கள் கோவிட் தனிமைப்படுத்தலில் சென்றது – சிங்கப்பூர் தம்பதியினருக்கு நேர்ந்த சோகம் !

Covid-19

ஒரு சிங்கப்பூர் தம்பதியினர் எட்டு நாள் விடுமுறைக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளனர், ஆனால் இறங்கிய முதல் நாளிலேயே கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் ஏழு நாட்கள் ஹோட்டல் அறையில் கழிக்க வேண்டியதானது.

25 வயதான ஹுவாங் மற்றும் லி என்ற தம்பதியினர், ஜூலை 13 முதல் நான்கு நாட்களுக்கு சியோலுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

விடுமுறையைத் தொடங்குவதற்கு முன், தம்பதியரின் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) முடிவுகள் பாசிட்டிவாக இருந்தன. மேலும் இருவரும் முழுமையாக தடுப்பூசி போட்டு  கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் விமான பயனத்தின் போது உடல்நிலை சரியில்லாமல் சில அறிகுறிகளுடன் இருந்துள்ளனர்.

விமானத்தில் நாங்கள் சரியாக உணரவில்லை, வறண்ட கேபின் தான் தொண்டை வறட்சி மற்றும் அரிப்புக்கு காரணம் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக நாங்கள் தென் கொரியாவுக்கு வந்தபோது, சோதனையில் பாசிட்டிவாக வந்தது என ஹுவாங் கூறியுள்ளார்.

தென் கொரியாவிற்கு வரும் குறுகிய கால பார்வையாளர்கள் கோவிட்-19 க்கு பாசிட்டிவாக  சோதனை செய்யும் பட்சத்தில், தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதனால் அடுத்த ஏழு நாட்களுக்கு, அத்தம்பதியினர் சியோலில் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும் அவர்களின் அனைத்து பயண திட்டங்களையும் ரத்து செய்தனர்.