ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா 2021: முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிப்பு!

Sri Mariyamman temple Firewalking Ceremony

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று சௌத் பிரிட்ஜ் (South Bridge) சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன். இந்த கோயிலுக்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து தரிசனம் செய்வர். இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

பணியாளர்கள் பற்றாக்குறையை சிறப்பாக சமாளித்த சிங்கப்பூர் நிறுவனங்கள்!

அந்த வகையில், இந்த ஆண்டு தீமிதித் திருவிழா அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடனும், கடுமையான கட்டுப்பாடுகளுடனும் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. குறைவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தீமிதித் திருவிழாவுக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், தீமிதித் திருவிழா நடைபெறும் தினத்திலும், நேர்த்திக் கடனை நிறைவேற்றவிருக்கும் அனைத்து பக்தர்களும் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 1- ஆம் தேதியில் அங்கபிரதட்சிணம், கும்பிடுதண்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 24- ஆம் தேதி அன்று தீமிதித் திருவிழா நடைபெற உள்ளது. தீமிதித் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்கான முன்பதிவு, நாளை (24/09/2021) காலை 10.00 மணி முதல் இணைய வழியில் தொடங்கவிருக்கிறது. கோயில் திருவிழாவில் பங்கேற்க https://heb.org.sg/firewalking2021/ என்ற இணையதளம் வழியாக பக்தர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இரண்டு கட்டங்களாக முன்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.24 முதல் மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை!

தீமிதித் திருவிழாவுக்கான முன்பதிவு, இரண்டாம் கட்டத்தில் இடம்பெறும். அக்டோபர் மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு பிறகு, கொரோனா நோய்த்தொற்றின் நிலவரத்தைப் பொறுத்து, அதற்கான முன்பதிவு தொடங்கும். முன்பதிவு தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணைய தளத்தை அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.