ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடந்த முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடந்த முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள சிலோன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple). இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் (Sri Murugan Thirukkalyanam) நேற்று (நவ.19) கோலாகலமாக நடைபெற்றது.

சர்க்யூட் சாலை அருகே இறந்து கிடந்த ஆடவர்: “சொந்தம் யாரும் இல்லை” – போலீஸ் விசாரணை

இந்த திருக்கல்யாணத்தில் 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களுக்கு பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடந்த முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்!
Photo:Sri Senpaga Vinayagar Temple

பின்னர், அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் அமர்ந்த படி, ஊர்வலமாக வந்து முருகன், வள்ளி, தெய்வானை, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து, கந்தசஷ்டி விழா இனிதே நிறைவடைந்தது.

‘”WHATSSAPP ME NOW” என்ற குறிப்பு… சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

முன்னதாக, மேள, தாளங்கள் முழங்க பெண்கள் சீர்வரிசைத் தட்டுகளை ஆலயத்திற்கு கொண்டு வந்தனர்.

Verified by MonsterInsights