பக்தர்களின் வருகை குறித்து ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு!

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று (22/07/2021) இரண்டாம் கட்டம் Phase 2 (Heightened Alert) மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீவைராவிமட காளியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இரண்டாம் கட்டம் Phase 2 (Heightened Alert) கருத்தில் கொண்டு, ஸ்ரீவைராவிமட காளியம்மன் கோயிலில் வரும் ஜூலை 23- ஆம் தேதி அன்று பௌர்ணமி பூஜைக்கு பின்வரும் மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

1. இரவு 08.00 மணி முதல் 08.45 மணி வரை எந்த நேரத்திலும் 30 பக்தர்கள் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள்.

2. பக்தர்கள் பால் குட அபிஷேகத்திற்கு http://svkt.org.sg/ என்ற இணையதளத்தில் கட்டணம் மற்றும் பதிவு செய்யலாம்.

தனிமைப்படுத்தப்படாமல் நாடு திரும்ப மலேசிய ஊழியர்கள் கோரிக்கை மனு

3. உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குடத்தைச் செலுத்திவிடுவார்கள்.

4. பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பௌர்ணமி பூஜையைப் பார்க்க இயலாது.

5. அமைக்கப்பட்டுள்ள பாதை வழியே பக்தர்கள் நிற்காமல் நடந்து தரிசனம் செய்வதால், மற்ற பக்தர்கள் கோயிலுக்குள் உள்ளே வர வாய்ப்பு கிட்டும்.

6. முதியவர்கள், நாள்பட்ட அல்லது உள்ளார்ந்த நிலைமைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் தங்கள் நலனுக்காக வீட்டிலிருந்து வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

7. உங்கள் ஒத்துழைப்பையும், புரிதலையும் நாங்கள் நாடுகிறோம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 62595238 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.