பிடோக்கில் தற்காலிகத் தங்கும் விடுதி – வெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்து மனிதவள அமைச்சகம் விளக்கம்..!

STATUS OF WORKERS MOVING TO BEDOK WORKSITE
(Photo: Facebook/Gerald Giam)

சிங்கப்பூர் பிடோக்கில் தற்காலிகத் தங்கும் விடுதிக்குச் செல்லும் ஊழியர்களின் நிலை குறித்து மனிதவள அமைச்சகம் (MOM) விளக்கம் அளித்துள்ளது.

இதில் 40 வெளிநாட்டு ஊழியர்கள், சிறப்புக் கல்விப் பள்ளி கட்டுமானத் தளமான 50 Bedok Reservoir Crescent கட்டுமானத் தளத்தின் தற்காலிக தங்கும் விடுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக திரு. ஜெரால்ட் கியாம் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஹவ்காங் காப்பிக் கடையில் சண்டை – 5 பேர் கைது..! (காணொளி)

அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், கட்டுமானப் பணிகள் முடிவடையும் காலம் வரையில் ஊழியர்கள் அங்கு தங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிவு பேஸ்புக் பயனர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது, இந்த திட்டம் முடியும் வரை ஊழியர்கள் தங்குமிடத்திற்குள் அடைத்து வைக்கப்படுவார்கள் என்று கருதி சமூக ஊடகத்தில் பலர் கருத்து தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை, ஊழியர்களின் இந்த ஏற்பாடுகள் குறித்து மனிதவள அமைச்சு பேஸ்புக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

அந்த அறிக்கையில், பிடோக் கட்டுமானத் தளத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்ல முடியும் என்று MOM விளக்கி கூறியது.

கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பிற தங்குமிடங்களில் உள்ள ஊழியர்களை போலவே, அவர்களும் ஏற்கனவே அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வதாக அமைச்சு கூறியது.

அதன் ஒவ்வொரு அறையிலும் 10 பேருக்கு மேல் தங்குவதில்லை என்று திரு.கியாம் தம் பதிவில் தெரிவித்தார்.

அவர்களுக்கு அவர்களின் உணவு வழங்கப்படும், மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதற்கு அவர்களுக்கு வைஃபை வசதிகளும் வழங்கப்படும் என்றார்.

இதையும் படிங்க : தங்கும் விடுதியில் புதிதாக கிருமித்தொற்று கண்டுபிடிப்பு – 800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg