“சாவி இருந்துச்சு தட்டிட்டு போய்ட்டேன்” – கார், பேருந்தை ஓட்டிச்சென்று மாட்டிய திருடன்

Stealing car mini-bus man arrest Singapore
Singapore Police Force

சிங்கப்பூரில் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூர் கிழக்குப் பகுதியில் இருந்த கார் மற்றும் மினி பேருந்துகள் திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜாலான் செம்பக குனிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போனதாக ஒருவரிடமிருந்து போலீசாருக்கு கடந்த மாதம் அக்டோபர் 6, 2022 அன்று காலை 9:45 மணியளவில் புகார் வந்தது.

சிங்கப்பூரிலும் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய எலோன் மஸ்க் – தொடரும் வேட்டை

அதாவது ஓட்டுநர் தனது காரின் சாவியை வாகனத்திலேயே வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கார் மீட்கப்பட்டது.

அதே போல கடந்த மாதம் அக்டோபர் 25 அன்று நடந்த சம்பவத்தில் தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 62ல் மோட்டார் வாகனம் திருடப்பட்டது குறித்து காவல்துறையினருக்கு புகார் வந்தது.

அதாவது பேருந்து ஓட்டுநர் சாவியை மினி பேருந்தில் வைத்துவிட்டு சென்றவுடன், அந்த நபர் பேருந்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மினி பேருந்து மீட்கப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை மற்றும் CCTV உதவியுடன் 45 வயது நபர் நேற்று முன்தினம் (நவ.3) கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் மீது மோட்டார் வாகனம் திருடியதாக நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

சிகரெட்டு கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு ஓட்டுநர் கைது