சுமார் 3,200-க்கும் மேற்பட்ட தவறான வீடியோ: ஷூவில் ரகசிய கேமரா… சிக்கிய மருத்துவர்

Doctor who took more than 3,200 upskirt videos struck off medical register

சிங்கப்பூரில் மருத்துவர் ஒருவர் சுமார் 3,200-க்கும் மேற்பட்ட upskirt என்னும் தவறான வீடியோக்களை எடுத்ததாகக் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அவர் மருத்துவப் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டதாக சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலுக்கான (SMC) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

மருத்துவ நிபுணரை அதிகாரபூர்வ பதிவேட்டில் இருந்து நீக்குவது என்பது அவர்கள் இனி மருத்துவ தொழிலைப் செய்யமுடியாததை குறிக்கும்.

வேலையில்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி: தகுந்த பாதுகாப்பில்லை.. சிக்கிய முதலாளி – S$100,000 அபராதம்

GoPro ரகசிய கேமராவை அவர் ஷூவில் பயன்படுத்தி பெண்களிடம் அந்த வீடியோக்களை எடுத்ததாக நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட பிறகு, 2020ல் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மருத்துவமனைகள், மால்கள் மற்றும் ஜூனியர் கல்லூரிகள் போன்ற இடங்களில் அவர் இந்த வீடியோக்களை எடுத்துள்ளார்.

மொத்தத்தில், அவர் மூன்று முறை கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மருத்துவப் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஊழியர் கைது – லுக்அவுட் குற்றாவளி என தட்டி தூக்கிய போலீஸ்