தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் மொழியை வளர்க்க முதல் முயற்சி..!!

STYC launched its regional Tamil promotion by gifting 40 Tamil books to Tamil Education Promotion Centre at Yangon

மலேசியா, இந்தோனேசியா, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் தமிழ் நூல்களின் வழியாக தமிழை வளர்க்க சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் முயற்சி செய்து வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, உங்களிடம் இருக்கும் பழைய தமிழ் புத்தகங்களை சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்திற்கு நன்கொடையாக அளிக்குமாறு ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது.

நன்கொடையாக பெற்ற பழைய தமிழ் புத்தகங்களை, தமிழ் கற்பிக்கும் பள்ளிகளுக்கும், கோயில்களுக்கும் சிங்கப்பூரின் அன்பளிப்பாக வழங்க உள்ளதாக, மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், மியான்மர்-யாங்கோனில் உள்ள தமிழ் கல்வி வளர்ச்சி மையத்திற்கு 40 தமிழ் புத்தகங்களை பரிசளித்துள்ளது. இதன் மூலம் STYC தனது பிராந்திய தமிழ் மொழி குறித்த விளம்பரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், இளையர் மன்றம் கூறுகையில், வரும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள், மொத்தம் 1000 தமிழ் புத்தகங்களை அவர்களுக்கு பரிசளிப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.