சிங்கப்பூரில் தோன்றிய சூப்பர் மூன் – நாசா வெளியிட்ட சொல் ரகசியம் என்ன தெரியுமா?

super moon appears in singapore nasa

சிங்கப்பூரில் செவ்வாய் மாலை (ஜூன் 14) “ஸ்ட்ராபெரி சூப்பர் மூன்” காணப்பட்டது, வழக்கத்திற்கு மாறாக பெரிய மற்றும் பிரகாசமான நிலவின் புகைப்படங்களை மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

நாசாவின் கூற்றுப்படி, சூப்பர் மூன் என்ற சொல் புதிய அல்லது முழு நிலவைக் குறிப்பிடுகிறது , இது சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது நிகழும்.
“ஸ்ட்ராபெரி நிலவு” என்னும் பெயர் ஸ்ட்ராபெரி அறுவடை நேரத்தில் ஏற்படும் முழு நிலவினை குறிப்பதாகும்.

இந்த பெயர் பூர்வீக அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தது என்று நாசா கூறியுள்ளது, இது ஐரோப்பாவில் மீட், தேன் அல்லது ரோஜா நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. “சந்திரன் ஸ்ட்ராபெர்ரி போலவோ இளஞ்சிவப்பு நிறத்திலோ இல்லை, இருப்பினும் இந்த அரிய இயற்கை நிகழ்வின் பெயர் பூர்வீக அமெரிக்க பழங்குடியினரால் வழங்கப்பட்டது ஆகும்.

 

சூப்பர் மூன்கள் வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை மட்டுமே நிகழும், மேலும் அவை மிக அருகில் இருக்கும் போது, ஆண்டின் மங்கலான நிலவை விட 17 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என்றும் நாசாவின் தரவுகளின்படி கூறப்பட்டுள்ளது.

சந்திரன் இரவு 7.51 மணிக்கு முழு வெளிச்சத்தில் இருக்கும் என்றும் அது தென்கிழக்கு திசையில் இருக்கும் என்றும் “வானம் தெளிவாக இருக்கும் வரை, பார்க்கலாம் என்றும் எந்த இடமும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

சந்திரன் புதன்கிழமையும் வெளிவரும் என்றும், அதே போல் வட்டமாகவும் பெரியதாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் புதன்கிழமை இரவு 8.12 மணிக்கு சந்திர உதயம் இருக்கும் என்றும், வானம் தெளிவாக இருந்தால் இரவு 8.30 மணிக்குள் தெரியும் என்றும் கூறப்பட்டு வருகிறது.