பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பேரங்காடிகள்..!

(Photo: Business-Insider)

சிங்கப்பூரில் பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க கட்டணம் வசூலிக்க இருப்பதாக நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற துணை மூத்த அமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு அமைச்சுகளும் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசிய அவர் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் எண்ணத்தில் இந்த முயற்சி எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்கு புதிதாக தொற்று!

பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் விதிப்பதால் குறைந்த வருமானம் கொண்ட சில குடும்பங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதை பற்றியும் எவ்வாறு பைகளுக்கு கட்டணம் விதிப்பது பற்றியும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று திரு கோர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திடம் கடந்த ஜனவரி மாதம் குடிமக்கள் பணிக்குழு தாக்கல் செய்த 14 யோசனைகளில் 8 யோசனைகளை அமைச்சும் வாரியமும் ஊக்கமளித்ததாக கூறப்பட்டுள்ளது

அதில் பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க கட்டணம் வசூலிப்பதும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் NTUC ஃபோர்பிரைஸ் என்னும் நிறுவனம் தனக்கு சொந்தமான 25 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க கட்டணம் வசூலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

2019 – 2020க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு 1.5 மில்லியனாக குறைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியது.

சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 329 பேர் கைது