சட்டவிரோத குழுக்களின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 75 பேர் கைது

suspected unlawful members arrested
75 suspected gang members arrested

சட்டவிரோத குழுக்களின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) ​​தெரிவித்துள்ளது.

அதில் 16 முதல் 54 வயதுக்குட்பட்ட ஆடவர்கள், தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய தொண்டாற்றிய டாக்டர் R.தேவேந்திரன் காலமானார்

இரகசிய குழு நடவடிக்கைகளை அடக்குவதற்காக உணவு மற்றும் பான விற்பனை கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் குற்றப் புலனாய்வுத் துறை, மத்திய காவல் பிரிவு, கிளமெண்டி, டங்லின், ஆங் மோ கியோ, பெடோக் மற்றும் உட்லேண்ட்ஸ் ஆகிய காவல் பிரிவு அதிகாரிகள் இந்த அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

(Photo: SPF)

இந்த வார தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​24 ஆடவர்கள் சட்டவிரோத குழுக்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் இதுபோன்ற குழு நடவடிக்கைகளுக்கு எதிராக தீவு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று SPF தெரிவித்துள்ளது.

பிளாட்டின் 10வது மாடியில் இருந்து விழுந்த இளம் பெண்…

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…