சிங்கப்பூரில் ONE பாஸ் வேலை அனுமதி – புதிதாக அமலுக்கு வரப்போகும் நடைமுறை!

ICA singapore trave passport

சிங்கப்பூருக்கு திறமையான வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்க வெளியிடப்படவுள்ள புதிய வேலை அனுமதியின்கீழ் ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள கோட்பாடுகளில் மாற்றமில்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

Overseas Networks & Expertise Pass என்ற அந்த வேலை அனுமதி சிங்கப்பூரை ஓர் அனைத்துலகத் திறனாளர் நடுவமாக அமைத்துத் தர வகைசெய்யும் என்றார்.

அந்த வேலை அனுமதிக்குத் தகுதி பெறக் குறைந்தபட்சம் 30,000 வெள்ளி மாதச் சம்பளம் பெறவேண்டும்.

இல்லைஎன்றால் அறிவியல், தொழில்நுட்பம், கலை, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனையாளர்களாக இருக்கவேண்டும்.

அது சிங்கப்பூரின் வேலை அனுமதிக் கட்டமைப்பின்கீழ் மற்ற மாற்றங்களுடன் சேர்ந்து செயல்பாட்டுக்கு வரும்.

மேலும் புதிய வேலை அனுமதி தவறான வழியில் பயன்படுத்தப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தவறான சம்பள விவரங்கள் அளிக்கப்படும் சாத்தியமுள்ள சம்பவங்களை ஆராய்ந்து, பின்னணி விவரங்களை அறியும் பணியை அமைச்சு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் ONE pass எனும் புதிய வேலை அனுமதி அறிமுகமாகும்.