தமிழ் எழுத்துக்களை கொண்டு சிங்கப்பூர் சாதனை.!

சிங்கப்பூரில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துகளில் தொடங்கும் சொற்களை தரையில் எழுதி காட்டி இருவர் சாதனை படைத்துள்ளனர்.

உலகில் மிக பழமை வாய்ந்த மொழி தமிழ் மொழி ஆகும். தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 என்பது நாம் அறிந்தது தான். 247 எழுத்துக்களை எழுதி அவற்றில் தொடங்கும் சொற்களை எழுதும் போட்டி சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் வட்டாரத்தில், பூசுவான் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒருவர் என போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த எழுத்து கட்டங்களை சுற்றி கோலம் போடப்பட்டு இருந்தது. இந்த கோலம் 25×16 மீட்டர் சுற்றளவு கொண்டது குறிப்பிடத்தக்கது . இதில் திருமதி. ரம்யா ஸ்ரீனிவாசன் மற்றும் திருமதி. காயத்ரி பிரகாஷ் ஆகியோர் போட்டி இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.

இந்த போட்டிக்கு முன் பரதநாட்டியம் மற்றும் கரகாட்டம் என தமிழ் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 290 பேர் பங்குப் பெற்றனர். மேலும், பங்கேற்பாளர்களில் ஒருவர் ‘ ஞ ‘ மற்றும் ‘ ங ‘ எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் அதிகம் புழக்கத்தில் இல்லாதது குறித்து விளக்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியை அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். மேலும், குழந்தைகளுக்கு பைண்டிங் செய்யவும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.