சிங்கப்பூர் தமிழர்களோடு சேர்ந்து சீனர்களும் தீ மிதிப்பார்கள் – ஆன்மீகத்தில் தமிழ் இனம் வைத்த அறிவியல்!

தீமிதித்தல் சிங்கப்பூரில் புகழ்பெற்றது. பக்தர்கள் தீயில் நடப்பதும். இந்தப் பக்தர்கள் அவர்கள் வேண்டுதல் நிறைவேற அல்லது வேண்டியது நிறைவேறிய பின் தீமிதிப்பர்.

இவர்கள் நன்றாக, நெடுநேரம் எரியவைக்கப்பட்டு சமமாக்கப்பட்ட தீயின் மேல் வேகமாக நடப்பார்கள், அல்லது ஓடுவார்கள். அதனால் கால்களில் ஓரளவுதான் கொப்புளங்கள் காணப்படும். சிலரை அதிக தீக்காயத்தினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் உண்டு.

தீமிதிப்பது தன்னம்பிக்கையை வளர்க்கிறது. தீமிதித்தவுடன் பலர் புத்தம் புதிய மனிதர்களாக உலாவரலாம்.

இதுபோன்ற பழக்கங்கள் வெவ்வேறு நாட்டு (பிஜி, சப்பான், சீனா) மக்களிடையேயும், ஆதிவாசிகளிடையேயும் வழக்கத்தில் உண்டு.

சிங்கப்பூரில் வாழும் ஒருவித (சீன) மதத்தைத் தழுவும் சீனர்களிடையேயும் கூட இந்த வழக்கம் உண்டு.

சில சீனர்கள், தமிழர்களுடன் சேர்ந்து இங்குள்ள மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை தீயில் நடப்பர்.

பெரும்பாலும் இந்த விழாக்கள் கோடைகாலங்களில் நடைபெறும் .கோடை காலங்களில் வெயில் தண்ணீர் பற்றாக்குறை சம்பந்தமான நோய்கள் அம்மை, கொப்புளங்கள், காலரா, ப்ளேக் அந்தக்காலங்களில் அடிக்கடி மக்களை தாக்கும். உஷ்ணத்தை எதிர்க்கும் சக்தியை மனதளவிலும் உடலளவிலும் எதிர்க்க பழக்கப்படுத்திக் கொள்ளவே இந்த கிராமீய ஏற்பாடுகள்.

வேப்பிலையை ஊர் முழுவதும் அல்லது வீடுகளில் கட்டுவார்கள். இதற்கு கொளை ,கொடி,கொப்பு கட்டுதல் என்று பெயர்.

அதற்குக்காரணமும் உண்டு. தொற்று நோய்,எங்கள் ஊரில் நுழையக்கூடாது அல்லது வெளியூரார் வரவேண்டாம், உள்ளூர்க்காரர்கள் கொடிக்கட்டிவிட்டால் வெளியூர் செல்லக்கூடாது என்று அறிவிக்க.

வைரஸ் என்று இப்போ தெரிஞ்சது. அந்தக்காலங்களில் குணமடைய ,வராமல் இருக்க வைராக்கியம் முக்கியம். இப்போவும் அதத்தான் சொல்றாங்க. இதுதாங்க தீமிதிப்பதற்கு பின்னால இருக்கும் அறிவியல்.