சிங்கப்பூர் வந்திருந்த கமல்ஹாசன் மீண்டும் சென்னை திரும்பினார்..!

Kamal Haasan return to Chennai from Singapore

Kamal Haasan : பிரபல தமிழ் திரையுலக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் வலது கால் முறிந்தது.

இதனை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. மேலும், நவம்பர் 22-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கம்பி அகற்றப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்…!

இதனை தொடர்ந்து, 2 வார மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்துக்கொண்ட கமல் சென்னை திரும்பியுள்ளார்.

அடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பில் பிப்ரவரி மாதம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2 ஆகும் .

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஜீரோ சகிப்புத்தன்மை அணுகுமுறை; 3 நாட்களில் 8 பேர் பிடிபட்டனர்..!