சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படும் தமிழக மீன், நண்டுகள்; சீசன் களைகட்ட தொடங்கியது.. !!

Season begin: Tamil Nadu fish ready import to singapore

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன் பிடி சீசன் காலமாகும். 6 மாத காலம் நடைபெறும் இந்த சீசன் காலத்தில் 50-க்கும் மேற்பட்ட வகை மீன்கள் பிடிக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

முக்கியமாக சிங்கப்பூர், மலேசியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் 50-க்கும் மேற்பட்ட வகை மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

மீனவர்களது வலையில் காலா, ஷிலா, வாவல், இறால், நண்டு, மட்லீஸ் போன்ற மீன்கள் கிடைக்கின்றன. இன்னும் ஓரிருநாளில் வடகிழக்கு பருவ காற்று வீச துவங்கிய உடன் இந்த பகுதியில் மீன்பிடி சீசன் முடிவடைந்து அப்பகுதி மீனவர்களும் கோடியக்கரைக்கு வந்து விடுவர்.

இந்த கோடியக்கரையில் சீசன் காலத்தில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும். மேலும் சீசன் துவங்கி உள்ள நிலையில் மட்லீஸ், வாவல், காலா போன்ற மீன்கள் அதிகம் கிடைக்கும். கடந்த 2 நாட்களாக அதிக அளவில் நீலக்கால் நண்டு கிடைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அவற்றை கடற்கரையிலேயே அவித்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

தகவல் : தமிழக ஊடகங்கள்