பப்புவா நியூ கினியா ( Papua New Guinea) நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு சிவகங்கையை சேர்ந்தவர் அமைச்சராக தேர்வு!

பப்புவா நியூ கினியாவின் ( Papua New Guinea) புதிய அமைச்சராக தமிழ் நாட்டை சேர்ந்த சசீந்திரன் முத்துவேல் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சிவகங்கை பகுதியை சேர்ந்த சசீந்திரன் முத்துவேல் ஆரம்ப கால கட்டத்தில் வேலை தேடி பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார். தற்போது, அவர் நாட்டின் பொது நிறுவன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் குறிப்பாக பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் சிவகங்கை பகுதியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

சசீந்திரன் முத்துவேல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் ஆவார். மலேசியாவில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்னர், 1999 ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்று, அங்கே ஒரு நிறுவனத்தில் பணியாற்றினார்.

2000 ஆம் ஆண்டில் அவர் வேலை செய்த நிறுவனம் மூடப்பட்டது. அதன் பிறகு, கடை ஒன்றை லீசுக்கு எடுத்து நடத்தினார்.

அடுத்து 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிறகு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Source: A.P Raman ஐயா முகநூல் பக்கம்.